உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குறுவட்ட அளவில் தடகள விளையாட்டு போட்டி

குறுவட்ட அளவில் தடகள விளையாட்டு போட்டி

கரூர்: கரூர் மாவட்டம், தரகம்பட்டி எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளியில், கிருஷ்ணராயபுரம் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகம்மாள் தலைமை வகித்தார். கடவூர் ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். குறுவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், தனியார் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 3,000 மீட்டர், 800, 600, 400, 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், மும்முறை தாண்டுதல், ஈட்டி எறிதல், கோல் ஊன்றித் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி, மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் பக்தவச்சலம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராமநாதன் செட்டி, மாவட்ட மெட்ரிக் கல்வி அலுவலர் செல்வமணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி