முப்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு விருது
குளித்தலை: குளித்தலை அடுத்த தரகம்பட்டியில், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா நடந்தது. தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். மாநில தலைவர் எழிலரசன், பொதுச்செயலாளர் வின்சென்ட்பால்ராஜ், மாநில பொருளாளர் ராஜசேகர், ஐபெட்டோ பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ் மற்றும் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டுபேசினார். இதில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் 25 ஆண்டு சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கும் ஆசிரியர்களை பாராட்டி விருது வழங்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் நன்றி தெரிவித்தார்.