வாழையில் மாவு பூச்சி தாக்குதல் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
குளித்தலை,:குளித்தலை அடுத்த, புழுதேரி வேளாண்மை அறிவியல் மையத்தில், வாழையை தாக்கும் மாவு பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் குறித்து, விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், குறிப்பாக வாழைத்தார்களில் எறும்புகளின் செயல்பாடுகள் அதிகளவில் காணப்படுவது மாவுப்பூச்சியின் அறிகுறியாக இருக்கும். எறும்புகள் மாவு பூச்சிகளால் சுரக்கும் இனிப்பான திரவத்தை உண்கின்றன. அவற்றை ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகளிடமிருந்து பாதுகாக்கின்றன. மாவுப்பூச்சிகள் தாக்காத மரங்களுக்கும் பரப்பவும் இவை உதவுகின்றன என விளக்கம் அளிக்கப்பட்டது.குளித்தலை தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா, புழுதேரி வேளாண் அறிவியல் மைய தலைமை விஞ்ஞானி திரவியம் மற்றும் முனைவர் தமிழ்ச்செல்வி, தோட்டக்கலை உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 30க்கும் மேற்பட்ட வாழை விவசாயிகள் கலந்து கொண்டனர்.