இயற்கை பொருள் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம்
கரூர், திருவள்ளுவர் மூங்கில் மன்றம் சார்பில், இயற்கை பொருட்கள் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம், சென்ராமா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் நடந்தது.அதில், பிளாஸ்டிக் பிரஷ் மூலம் பல் துலக்குவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், கரூர் மாவட்டத்தில் மாதந்தோறும், மூன்று லட்சம் மூங்கில் பல் துலக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து அக்குபஞ்சர் மருத்துவர் சரவணன் விளக்கம் அளித்து பேசினார். பிறகு, பள்ளி மாணவ, மாணவியருக்கு மூங்கில் பல் துலக்கிகள் வழங்கப்பட்டன. பள்ளி தாளாளர் விஜயலட்சுமி, தலைமையாசிரியர் சாந்தி, ஆசிரியர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.