உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழூரில் போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

புகழூரில் போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

கரூர்:புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது.புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன் பேரணியை தொடங்கி வைத்தார். ைஹஸ்கூல் மேடு, தட்டாங்காடு, முருகம்பாளையம், புகழூர் நான்கு சாலை வழியாக சென்ற பேரணி மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில், பொதுமக்களுக்கு போதை பழக்கத்துக்கு எதிரான, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் விஜயன், நாட்டு நலப்பணி மாவட்ட தொடர்பு அலுவலர் யுவராஜா, திட்ட அலுவலர் சரவணன், உதவி அலுவலர் ஜெகதீசன் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ