உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

கரூர் கரூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.கலெக்டர் தங்கவேல் பேரணியை தொடங்கி வைத்தார். தின்னப்பா கார்னர், மனோகரா கார்னர், ஜவகர் பஜார் வழியாக திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தை பேரணி வந்தடைந்தது. இதில், 1,022 கல்லூரி மாணவ மாணவியர் ஆகியோர் கலந்து கொண்டனர். போதை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கரூர் எஸ்.பி., ஜோஷ் தங்கையா, ஆர்.டி.ஓ., முகமது பைசல், உதவி ஆணையர் கலால் கருணாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை