உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அய்யனார் சுவாமி கோவில் திருவிழா கோலாகலம்

அய்யனார் சுவாமி கோவில் திருவிழா கோலாகலம்

குளித்தலை, குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., காவல்காரன்பட்டியில் பொத்தியான் சம்பந்த இடங்காபுலியான் குடும்ப கூட்டத்தார்களின், குலதெய்வங்களான செல்வவிநாயகர், பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள் உடனுறை அய்யனார் ஆலயங்கள் தனித்தனியாக உள்ளன.இந்த கோவில்களில் விழா நடத்துவதற்கு முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து கடந்த, 1ல் பொத்தியான் சம்பந்த இடங்காபுலியான் குடும்ப கூட்டத்தார்கள் காவிரி நதியில் புனித நீராடி கோவிலுக்கு வந்தனர். அன்று மாலை விநாயகர், முருகன், வெங்கடாஜலபதி, லாடசன்னாவி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து குடிபாட்டுக்காரர்கள் பொங்கலிடுதல், பால் பொங்கல், மாவிளக்கு பூஜை, மொட்டை அடித்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்து வழிபட்டனர். பின்னர் கருப்பசாமி, மதுரைவீரன், மந்திரமகாமுனி, வீரமகாமுனி ஆகிய சுவாமிகளுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை பட்டவன சுவாமிகளுக்கு அபி ேஷம் நடைபெற்றது.பின், மஞ்சள் நீராட்டுடன் சுவாமிகளுக்கு விடையாற்றி நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை