உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோசமான சாலை ஓட்டுனர்கள் அவதி

மோசமான சாலை ஓட்டுனர்கள் அவதி

கிருஷ்ணராயபுரம்: கள்ளப்பள்ளி, மாரியம்மன் கோவில் வழியாக செல்லும் பேவர் பிளாக் சாலை, மோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, கள்ளப்பள்ளி கொடிக்கால் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகில் கள்ளப்பள்ளி தெற்கு சாலை இணைப்பு வரை, தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு சாலை பேவர் பிளாக் கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை இறபுறமும் ஆக்கிரமிப்பு காரணமாக, பேவர் பிளாக் சாலை வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் பேவர் பிளாக் சாலையை துாய்மைப்படுத்தி, வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ