உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பொங்கலை முன்னிட்டு வாழை இலை விற்பனை மும்முரம்

பொங்கலை முன்னிட்டு வாழை இலை விற்பனை மும்முரம்

கிருஷ்ணராயபுரம்: பொங்கலை முன்னிட்டு, வாழை இலை விற்பனை மும்முரமாக இருந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, நந்தன் கோட்டை, வல்லம், கொம்பாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழை இலை அறுக்கப்பட்டு லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபும், மகாதானபுரம் ஆகிய பகுதிகளில் விற்கப்படுகிறது. பொங்கல் விழாவை முன்னிட்டு வாழை இலையின் தேவை அதிகரித்து காணப்பட்டது. இதனால் விற்பனை சூடுபிடித்தது. வாழை இலை கட்டு ஒன்று, 350 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சிறிய வாழை இலை, இரண்டு ரூபாய் என சில்லரையாக விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ