உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வங்கி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

வங்கி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர்: கரூர் மாவட்ட, வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் சார்பில், மாவட்ட செயலாளர் பிரசாந்த் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை நாளாக அறிவிக்க வேண்டும், அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை விட வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் ரங்கன், கணேசன், வடிவேலன், விஜயகாந்த், சத்திய பிரியா உள்பட, 100க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை