உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொத்தம்பாளையம் தடுப்பணையில் அதிகரித்து வரும் நீரால் குளிக்க தடை

கொத்தம்பாளையம் தடுப்பணையில் அதிகரித்து வரும் நீரால் குளிக்க தடை

அரவக்குறிச்சி, கொத்தம்பாளையம் தடுப்பணையில், நீர்வரத்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணை, 90 அடியில் அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் மூலம், கரூர் மாவட்டத்தில், 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அமராவதி ஆற்றில், நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அரவக்குறிச்சி அருகே உள்ள, கொத்தம்பாளையம் தடுப்பணை நிரம்பி வருகிறது.இதையடுத்து, கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால், பொதுமக்கள் யாரும் தடுப்பணையில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி