சீரான விலையில் வெற்றிலை விற்பனை
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், சீரான விலையில் வெற்றிலை விற்பனை செய்யப்பட்டது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, வீரவள்ளி, வீரகுமரான்பட்டி, கொம்பாடிப்பட்டி, மகிளிப்பட்டி, சிந்தலவாடி ஆகிய இடங்களில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். பறிக்கப்படும் வெற்றிலைகள், லாலாப்பேட்டை கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில வாரங்களாக, வெற்றிலை சீரான விலையில் விற்பனையாகிறது. 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளி, 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 கவுளி கொண்ட மூட்டை ஒன்று, 4,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லரை விற்பனைக்காக, வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து, வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். தற்போது ஏற்றமும் இல்லாமல், இறக்கமும் இல்லாமல் வெற்றிலை சீரான விலையில் விற்பனையாகிறது.