உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்றவர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்றவர் பலி

அரவக்குறிச்சி, மதுரையிலிருந்து, கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சீத்தப்பட்டி காலனி பகுதியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார்.மதுரை மாவட்டம், மேலுார் அருகே கடம்பூர் முத்துப்பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ண பாண்டியன், 50. இவர் மதுரையில் இருந்து, கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 10ம் தேதி இரவு, 10:30 மணியளவில் ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் சென்று கொண்டிருந்தார். சீத்தப்பட்டி காலனி பகுதி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, பைக் மீது மோதியது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த கிருஷ்ணபாண்டியன் பலத்த காயமடைந்தார்.அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மறுநாள் உயிரிழந்தார். கிருஷ்ணபாண்டியன் மனைவி பிரியா கொடுத்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு மாயமான வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை