மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவர் கொலை? தண்டவாளத்தில் உடல் மீட்பு
03-Aug-2025
கரூர், கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே, பொறியியல் கல்லுாரி மாணவர் உடலை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.கரூர் மாவட்டம், வெங்கமேடு ரொட்டிக்கார தெருவை சேர்ந்த ஆனந்த் என்பவரது மகன் ஜெயக்குமார், 20; தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர். இவர் கடந்த, 17 முதல் காணவில்லை. இந்நிலையில், நேற்று கரூர் - சேலம் ரயில்வே தண்ட வாளம் அருகே, முள் காட்டில் முகம் சற்று கருகிய நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த வெங்கமேடு போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்த போது, காதல் தோல்வி காரணமாக ஜெயக்குமார், மின் கம்பிகளை பிடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது.மேலும், ஜெயக்குமார் சாவில் வேறு காரணம் ஏதேனும் உள்ளதா எனவும், வெங்கமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
03-Aug-2025