உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையோரத்தில் வீசப்படும் இளநீர் குடுவைகளால் கொசு உற்பத்தி அபாயம்

சாலையோரத்தில் வீசப்படும் இளநீர் குடுவைகளால் கொசு உற்பத்தி அபாயம்

கரூர், கரூரில் பயன்படுத்தப்பட்ட இளநீர் குடுவைகள் சாலையில் வீசப்படுவதால், அதில் காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் அதிகரித்துள்ளது.கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட காரணங்களால், மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழை காலத்தில் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.இந்நிலையில், மலேரியா, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும், கொசு உற்பத்தியை அதிகரிக்கும் இளநீர் குடுவைகளை சேமித்து வைக்க கூடாது என, தமிழக அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், கரூர் நகரில் கோவை சாலை, உழவர் சந்தை சாலை, தின்னப்பா நகர் சாலை, வெங்கமேடு சாலை, மதுரை சாலை உள்ளிட்ட பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இளநீர் விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் இளநீரை அருந்திய பிறகு, குடுவைகளை அப்புறப்படுத்தாமல், அதே இடத்தில் வைத்து விட்டு வியாபாரிகள் சென்று விடுகின்றனர்.தற்போது வீசப்பட்ட இளநீர் குடுவைகளில், காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. எனவே, சாலையோரம் வீசப்பட்ட இளநீர் குடுவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ