மணல் அள்ள அனுமதி கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் மனு
கரூர், டிச. 24-மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என, கரூர் மாட்டு வண்டி தொழிலாளர் நல சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.அதில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் இருந்து, உள்ளூர் பயன்பாட்டுக்கு மணல் அள்ள, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அமலாக்கத்துறை ரெய்டு காரணமாக, மணல் குவாரிகள் மூடப்பட்டு விட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம் இல்லாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். மாடுகளின் பராமரிப்பு செலவும் அதிகரித்து உள்ளது. இது குறித்து மனு அளித்த போது, மணல் அள்ள அனுமதி வழங்க பரிசீலனையில் உள்ளதாக, நீர்வளத்துறையிலிருந்து கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. எனவே, மணல் அள்ள அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.