மேலும் செய்திகள்
புதிய வழித்தடத்தில் பஸ் பொதுமக்கள் வரவேற்பு
06-Jan-2026
கரூர்: கரூர் புதிய பஸ் ஸ்டாண்டில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-, ஈரோடு மண்டலம் சார்பில் புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பஸ், கரூரிலிருந்து கொடுமுடி, சிவகிரி, அரச்சலுார், வெள்ளோடு, பெருந்துறை வரை புதிய வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. கரூர் கலெக்டர் தங்கவேல், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, துணை மேயர் சரவணன், அரசு போக்குவரத்துக்கழக ஈரோடு பொது மேலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
06-Jan-2026