புதிய வழித்தடத்தில் பஸ் எம்.எல்.ஏ., தொடக்கம்
குளித்தலை: குளித்தலை அடுத்த தென்னிலை பஞ்., இளையபெருமாள்பட்-டியில் இருந்து, கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்-டது. கடவூர் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். இளையபெருமாள்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு தென்னிலை பஞ்.. முன்னாள் தலைவர் பழனியம்மாள், ஒன்றிய இளைஞரணி மாணவரணி அமைப்பாளர் இளையராஜா முன்னிலை வகித்தனர். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி கொடியசைத்து வழித்தடத்தை தொடங்கி வைத்தார்.இதன் மூலம் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர், டெக்ஸ் தொழிலாளர்கள், பொதுமக்கள் பயன்பெற உள்ளனர்.