உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்கு அமைக்கலாமே

தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்கு அமைக்கலாமே

குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் சோதனை சாவடியில், குமாரமங்கலம்- பெட்டவாய்த்தலை ஆஞ்சநேயர் கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை, இருள் சூழ்ந்து காணப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.குறிப்பாக, குமாரமங்கலம் ரயில்வே கேட் பகுதியில், பல கிரா-மங்களில் இருந்து வரும் பொது மக்கள் தேசிய நெடுஞ்சா-லையில் கடக்கும் போது விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, குமாரமங்கலம் ரயில்வே கேட் அருகில், உயர் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும்.மேலும், சாலையோரங்களில் மின் கம்பம் நட்டு, மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், கரூர் மற்றும் திருச்சி கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தும் கண்டும் காணாமல் உள்ளனர்.எனவே, மருதுார், குமாரமங்கலம், பெட்டவாய்த்தலை வரை மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை