உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பண்ணையில் கார் சேதம் 4 பேர் மீது வழக்கு

பண்ணையில் கார் சேதம் 4 பேர் மீது வழக்கு

குளித்தலை, குளித்தலை, சிந்தலவாடி பஞ்சாயத்து, புனவாசிப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ், 33. கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவருக்கும், மனைவி மோகனப்ரியாவுக்கும் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர்.கடந்த செப்., 27 இரவு, 8:45 மணிக்கு, மோகனப்ரியா, அவரது தாய், மைத்துனர் சங்கர், மாமா வீரமலை ஆகியோர், மகிளிப்பட்டியில் உள்ள கோழி பண்ணையை பூட்டினர். இதை அறிந்து வந்த பிரகாஷ், பண்ணை சாவியை கேட்டதற்கு, 4 பேரும் சேர்ந்து, தகாத வார்த்தையில் திட்டி, குச்சியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் பண்ணையில் இருந்த, 'சிசிடிவி' கேமரா, 'டிவி' மானிட்டர், ஹூண்டாய் காரை அடித்து சேதப்படுத்தினர். தோகைமலை தனியார் மருத்துவமனையில் பிரகாஷ் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, லாலாப்பேட்டை போலீசார், மோகனப்ரியா உள்பட, 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !