உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காகித ஆலை முன் வாயிற்கூட்டம் முன்னாள் அமைச்சர் மீது வழக்கு

காகித ஆலை முன் வாயிற்கூட்டம் முன்னாள் அமைச்சர் மீது வழக்கு

கரூர், கரூர் அருகே, போக்குவரத்து பாதிக்கும் வகையில் வாயிற்கூட்டம் நடத்தியதாக, முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், புகழூரில் தமிழ்நாடு காகித ஆலை (டி.என்.பி.எல்.,) செயல்படுகிறது. அதில், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், காகித ஆலை நலிவடைந்து வருவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, அண்ணா தொழிற்சங்கம் சார்பில், காகித ஆலை முன் வாயிற்கூட்டம் நடந்தது. அதில், கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசினார்.இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து பாதிக்கும் வகையில், வாயிற் கூட்டம் நடத்தியதாக காகித ஆலை பாதுகாப்பு பிரிவு துணை மேலாளர் செந்தில் குமார், 51, போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கமலகண்ணன் உள்பட பலர் மீது, வேலா யுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !