மேலும் செய்திகள்
பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
06-Mar-2025
கரூர்: கரூர் அருகே, மனைவியை அடித்த கணவன் மீது, மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி சங்கரா பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, 47; இவருக்கும் பழனியம்மாள், 45, என்ப-வருக்கும், 27 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நி-லையில், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த, மூன்றாண்டுகளாக சின்னசாமியும், பழனியம்மாளும் பிரிந்து வாழ்கின்றனர். தற்-போது, சின்னசாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்-பதாக கூறி, பழனியம்மாள் தட்டி கேட்டுள்ளார். அப்போது, ஆத்-திரமடைந்த சின்னசாமி, பழனியம்மாளை அடித்து உதைத்-துள்ளார். இதுகுறித்து, பழனியம்மாள் அளித்த புகாரின்படி, கரூர் மகளிர் போலீசார் சின்னசாமி மீது, வழக்குப்பதிவு செய்து விசா-ரிக்கின்றனர்.
06-Mar-2025