உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முதலீடு செய்த பணத்தை தராத பங்குதாரர் மீது வழக்கு

முதலீடு செய்த பணத்தை தராத பங்குதாரர் மீது வழக்கு

கரூர், கரூர் அருகே, ஓட்டல் தொழிலில் முதலீடு செய்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய பங்குதாரர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் செந்தில், 57. இவர், நாமக்கல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், 42, என்பவருடன் சேர்ந்து, கரூர் அருகே காக்காவாடியில், ஓட்டல் ஒன்றை கடந்த, 2024ல், தொடங்கினார். அதில், செந்தில் இரண்டு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்திருந்தார். இந்நிலையில், ஓட்டல் நிர்வாகத்தை சதீஷ்குமாரின் தம்பி எடுத்து கொண்டார். இதனால், முதலீடு செய்த பணத்தை, செந்தில் திரும்ப கேட்டுள்ளார்.அப்போது, ஆத்திரமடைந்த சதீஷ்குமார், செந்திலை மிரட்டியுள்ளார். இதுகுறித்து, செந்தில் அளித்த புகார்படி, வெள்ளியணை போலீசார் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை