வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு
குளித்தலை, குளித்தலை அடுத்த, நங்கவரம் குழுமிக்கரையை சேர்ந்தவர் சந்திரன், 29. இவர் தனக்கு சொந்தமான பைக்கில் கடந்த, 20 மாலை 7:00 மணியளவில் குறிச்சியிலிருந்து, நங்கவரம் நோக்கி ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலையில் சென்றார்.அப்போது எதிரே வேகமாக வந்த டீலக்ஸ் பைக் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சந்திரனை, பைக்கில் வந்த வெள்ளைச்சாமி, இளவரசன், கமல், தினேஷ் ஆகிய நான்கு பேரும் சரமாரியாக தாக்கினர். பின்னர் கமல் என்பவர், தனது பைக்கில் சந்திரனை ஏற்றிக்கொண்டு, குழுமணி அரசு மருத்துவமனைக்கு அடித்துக் கொண்டே சென்றுள்ளார்.பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ளார். சந்திரன் கொடுத்த புகார்படி, நான்கு பேர் மீதும் நங்கவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.