உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காருக்கு வழி விடாததால் தகராறு டிரைவர் மீது வழக்கு பதிவு

காருக்கு வழி விடாததால் தகராறு டிரைவர் மீது வழக்கு பதிவு

குளித்தலை, குளித்தலை அடுத்த, வீரகுமாரன்பட்டியை சேர்ந்த பிரபாகரன், 30, கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில் சீகம்பட்டி இரட்டைவாய்க்காலில், தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது கே.புதுப்பொட்டியை சேர்ந்த தர்மராஜன், 41, என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் நடுசாலையில் நிறுத்தியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், தர்மராஜன் காரை விட்டு இறங்கி கல்லை எடுத்து தலையில் அடித்தார்.அதில் காயமடைந்த பிரபாகரன் அளித்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் தர்மராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை