உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆர்ப்பாட்டம் நடத்திய ஆசிரியர் இயக்கத்தினர் மீது வழக்குப்பதிவு

ஆர்ப்பாட்டம் நடத்திய ஆசிரியர் இயக்கத்தினர் மீது வழக்குப்பதிவு

கரூர்;கரூர் அருகே, அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என, நேற்று முன்தினம் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்ற ஆசிரியர், ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, போலீஸ் எஸ்.ஐ., தில்லைக்கரசி, போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.இதனால், தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களை சேர்ந்த இருதயசாமி, பெரியசாமி, கணேசன், மணிகண்டன், வேலுமணி, அமுதன், செல்லத்துரை உள்பட, 184 பேர் மீது, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை