மேலும் செய்திகள்
மோசமான நிலையில் சமுதாய கூடம்
22-Aug-2025
கிருஷ்ணராயபுரம் :பஞ்சப்பட்டி பஞ்சாயத்தில், காவிரி குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியுறுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி பஞ்சாயத்தில், இரண்டு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் காவிரி நீர் ஏற்றி, மக்களுக்கு வினியோகம் செய்யும் பணி நடந்தது.மக்கள் காவிரி நீரை குடிக்க பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது பஞ்சாயத்து நிர்வாகம் காவிரி நீரை தொட்டியில் ஏற்றாமல், மூன்று இடங்களில் மட்டும் குழாய் அமைத்து விட்டு, குடிநீர் தொட்டியில் போர்வெல் தண்ணீர் ஏற்றி மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.பழைய முறைப்படி காவிரி நீரை, குடிநீர் தொட்டியில் ஏற்றி மக்களுக்கு குடிப்பதற்காக வினியோகம் செய்ய, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
22-Aug-2025