உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாற்றி வைக்கப்பட்ட சிக்னல் விளக்குகள் கரூரில் விபத்து, நெரிசல் அதிகரிப்பு

மாற்றி வைக்கப்பட்ட சிக்னல் விளக்குகள் கரூரில் விபத்து, நெரிசல் அதிகரிப்பு

மாற்றி வைக்கப்பட்ட சிக்னல் விளக்குகள்கரூரில் விபத்து, நெரிசல் அதிகரிப்புகரூர், அக். 19-கரூர் நகரில், சிக்னல் விளக்குகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளன. இதனால், போக்கு வரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.கரூரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் குறைந்த இடவசதியுள்ள இடத்தில், பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இதனால், மனோகரா கார்னர், சேலம் பிரிவு, தின்னப்பா கார்னர், வாங்கப்பாளையம் பிரிவு, சர்ச் கார் னர், லைட்ஹவுஸ் கார்னர், சுங்க கேட், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட, பல இடங்களில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால், ஓரிரு இடங்களை தவிர மற்ற இடங்களில், சிக்னல் விளக்குகள் எரிவது இல்லை. மேலும், சில இடங்களில் சிக்னல் விளக்குகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கரூர்-கோவை சாலை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே, சிக்னல் விளக்குகள், 80 அடி சாலையை நோக்கி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதனால், கோவை சாலையில் இருந்து கரூர் நகருக்கு வரும், வாகன ஓட்டிகள் சிக்னல் விளக்குகள் இருப்பது தெரியாமல் வேகமாக செல்கின்றனர். அப்போது, அப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. மாற்றி வைக்கப்பட்ட சிக்னல் விளக்குகளை, கோவை சாலையை நோக்கி வைக்க, கரூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை