மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் வெள்ளி சிறப்பு பூஜை
21-Jun-2025
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை கடைவீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம், 29ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து கரகம் பாலித்து திருவீதி உலா பவனி வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்களாக அம்மனுக்கு அபிேஷகம் செய்து சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு அம்மன் திருத்தேரில் திருவீதி உலா பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. கடைவீதி, கொடிக்கால் தெரு சாலை, போலீஸ் ஸ்டேஷன் சாலை வழியாக அம்மன் தேரில் எடுத்து செல்லப்படுகிறது. தொடர்ந்து சிறப்பு வழிபாடு பூஜை நடக்கிறது.
21-Jun-2025