உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோழி தீவன லாரிகளால் கடும் சுகாதார சீர்கேடு

கோழி தீவன லாரிகளால் கடும் சுகாதார சீர்கேடு

அரவக்குறிச்சி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனம், கேரளாவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. லாரிகளில் ஏற்றி கொண்டு வரும் தீவனங்கள், க.பரமத்தி சாலையை கடந்து வேலாயுதம்பாளையம் வழியாக நாமக்கல் மாவட்டத்திற்கு செல்கிறது. கோழி தீவனம் கொண்டு செல்லும் லாரிகள், முறையாக கோழி தீவனத்தை மூடாமல் செல்கின்றனர். இதனால், கோழி தீவன லாரிகள் செல்லும்போது இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.மேலும், க.பரமத்தி சாலையில் கோழி தீவன திரவ கழிவுகள் கொட்டப்படுகின்றன. இவற்றில் ஈ, கொசு போன்றவை தங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. மேலும், தெரு நாய்கள் இதனை இழுத்துச்சென்று ஆங்காங்கே போட்டு விடுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு சுவாச கோளாறு ஏற்படுகிறது. இதனால் க.பரமத்தி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !