உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் இன்று தி.மு.க., முப்பெரும் விழா விருது வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

கரூரில் இன்று தி.மு.க., முப்பெரும் விழா விருது வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

கரூர் :கரூரில் இன்று நடக்கும் தி.மு.க., முப்பெரும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி பேசுகிறார்.கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோடங்கிபட்டி பிரிவு சாலை அருகில், தி.மு.க., முப்பெரும் விழா இன்று மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு பொதுச்செயலர் அமைச்சர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். கரூர் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி வரவேற்று பேசுகிறார். பொருளாளர் பாலு, முதன்மை செயலாளர் அமைச்சர் நேரு, துணை பொதுச்செயலர்கள் பெரியசாமி, சிவா, ராசா, கனிமொழி, செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், விழாவில் பங்கேற்று, 6 பேருக்கு விருது மற்றும் பரிசு வழங்குகிறார். மேலும், மண்டலங்களில் உள்ள ஒன்றிய, நகரம் ஆகியவற்றில் கட்சி பணியில் சிறப்பாக செயல்படும், தலா ஒருவருக்கு நற்சான்று மற்றும் பணமுடிப்பு வழங்கி பேசுகிறார்.விழாவில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார். துணை பொதுச்செயலர் கனிமொழிக்கு - ஈவெரா விருது, பாளையங்கோட்டை முன்னாள் நகராட்சி தலைவர் சீதாராமனுக்கு- அண்ணா விருது, அண்ணா நகர் முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரனுக்கு - கலைஞர் விருது வழங்கப்படுகிறது. மேலும், தலைமை செயற்குழு உறுப்பினர் குளித்தலையை சேர்ந்த மறைந்த சிவராமனுக்கு - பாவேந்தர் விருது, சட்டசபை முன்னாள் கொரடா மருதுார் ராமலிங்கத்துக்கு- பேராசிரியர் விருது, முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிசாமிக்கு - ஸ்டாலின் விருது வழங்கப்படுகிறது.அமைச்சர் நேரு ஆய்வுகரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோடங்கிபட்டி பிரிவு அருகில், தி.மு.க., சார்பில் இன்று முப்பெரும் விழா நடக்கிறது.தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், முப்பெரும் விழா நடக்கும் மேடை உள்பட பல்வேறு பணிகளை, நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.அப்போது, முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் வந்து செல்லும் வழி, பொதுமக்கள் அமரும் இடம், வாகனம் நிறுத்தும் வசதி, பாதுகாப்பு ஆகியவை குறித்து அமைச்சர் நேரு கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !