மேலும் செய்திகள்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்
28-May-2025
கரூர், க.பரமத்தியில், சி.ஐ.டி.யு., சங்க மாவட்ட குழு கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். ஜூலை 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் மாவட்ட மாநாடு நடக்கிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க கரூர் மாவட்ட தலைவர் கந்தசாமி வரவேற்பு குழு தலைவராகவும், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ராஜாமுகமது செயலாளராகவும், சி.ஐ.டி.யு., சங்க மாவட்ட துணைத் தலைவர் கந்தசாமி பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 51 பேர் கொண்ட வரவேற்பு குழுவும் தேர்வானது. மாவட்ட மாநாட்டின் முதல் நாள் ஜூலை, 27-ல் மாலை நடக்கும் பேரணி, பொதுக்கூட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொள்வது, 28-ல் இரண்டாவது நாள் பொது மாநாட்டை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், சி.ஐ.டி.யு., சங்க மாவட்ட செயலர் முருகேசன், மாவட்ட துணைத் தலைவர்கள் ஹோச்சுமின், கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
28-May-2025