உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

கரூர், கரூர் மாவட்ட ஆட்டோ, டாக்சி, டெம்போ மற்றும் வேன் ஓட்டுநர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், மாவட்ட தலைவர் ஆசைதம்பி தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பைக் -டாக்ஸி அனுமதியை ரத்து செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டுமான வாரியம் போல வீடு கட்ட, நான்கு லட்ச ரூபாய் வழங்க வேண்டும், பணப்பயன் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் விரைந்து பரிசீலனை செய்து வழங்க வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் பாண்டியன், மாவட்ட தலைவர் ரங்கராஜ், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சுப்பிரமணி உள்பட ஆட்டோ டிரைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ