உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோதல்: 6 பேர் கைது

மோதல்: 6 பேர் கைது

குளித்தலை, குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் பஞ்., காட்டுகோவில் தெருவை சேர்ந்தவர் சித்ரா, 29; கூலி தொழிலாளி. அதே ஊரை சேர்ந்தவர் பார்த்திபன், மணிகண்டன் ஆகியோருக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த, 13ல், சத்தியமங்கலம் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அதே ஊரை சேர்ந்த பார்த்திபன், மணிகண்டன், ஐயப்பன், கமல், மற்றொரு மணிகண்டன், காசிநாதன் ஆகிய, ஆறு பேரும் சேர்ந்து, அரிவாள், உருட்டு கட்டையால், சித்ராவின் கணவர் சுப்பிரமணி, இவருடைய நண்பர் அண்ணாதுரை ஆகியோரை தாக்கியுள்ளனர். மேலும், சுப்பிரமணிக்கு சொந்தமான டூவீலர், அண்ணாதுரையின் கார் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். இதில், படுகாயமடைந்த சுப்பிரமணி, அண்ணாதுரை ஆகிய இருவரையும் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சித்ரா கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார், ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ