உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / துாய்மை பணியாளர் தவறி விழுந்து பலி

துாய்மை பணியாளர் தவறி விழுந்து பலி

கரூர், கரூர் அருகே, கீழே தவறி விழுந்த துாய்மை பணியாளர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவேல், 52; துாய்மை பணியாளர். இவர் கடந்த, 18ல் ராயனுார் பஸ் ஸ்டாப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மணிவேல் திடீரென தவறி சாலையில் விழுந்தார். அதில், தலையில் படுகாயம் அடைந்த மணிவேல், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சையின் போது உயிரிழந்தார்.இதுகுறித்து, மணிவேலின் உறவினர் ஜெகதீஸ்வரன், 38; என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை