உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரத்தில் தூய்மை பணி மும்முரம்

கிருஷ்ணராயபுரத்தில் தூய்மை பணி மும்முரம்

கிருஷ்ணராயபுரம், :கிருஷ்ணராயபுரத்தில், துாய்மை பணி செய்து டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி வளாகம், நடுநிலைப்பள்ளி வளாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களின் வெளிபுறம் மற்றும் உள்புறம் ஆகிய பகுதிகளில் தேங்கிய மழை நீர் அகற்றுதல், சுற்றுபுறத்துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டனர். சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் பணிகளை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !