மேலும் செய்திகள்
மனைவி மாயம்; கணவன் புகார்
10-May-2025
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, மின்சாரம் தாக்கியதில் வடமாநிலத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.மேற்கு வங்க மாநிலம், டால்கோலா பகுதியை சேர்ந்தவர் ஜிஜேந்திர் உரவ், 30. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். இவர் கடந்த, 24ல் வேலாயுதம்பாளையம் அருகே, முத்தம்பாளையம் பகுதியில், இளங்கோவன் என்பவரது வீட்டில் கட்டட பணிகளில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, எதிர்பாராதவிதமாக ஜிஜேந்தர் உரவ்வை மின்சாரம் தாக்கியது. அதில், மயக்கம் அடைந்த அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, ஜிஜேந்தர் உரவ் சகோதரி வீரம்மாகுமாரி, 22; போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-May-2025