உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கட்டட தொழிலாளி விஷம் குடித்து விபரீதம்

கட்டட தொழிலாளி விஷம் குடித்து விபரீதம்

குளித்தலை: குளித்தலை அடுத்த சேர்வைக்காரனுாரை சேர்ந்தவர் காளிமுத்து, 50; கட்டட தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி, 45, விவசாய கூலி வேலைக்கு சென்றிருந்தார். கடந்த, 3 காலை, 10:00 மணிக்கு, காளிமுத்து அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர், காளிமுத்துவை மீட்டு மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். அவரது மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை