மேலும் செய்திகள்
முட்செடிகளை அகற்றும் பணி தீவிரம்
30-Apr-2025
அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில் அதன் அலுவலகத்தில் பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அரவக்குறிச்சி தொகுதி பார்வையாளருமான தினகரன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். வீடு வீடாக சென்று, தி.மு.க., அரசு செய்த சாதனைகளை விளக்கி சொல்ல வேண்டும், வரும், 2026 சட்டசபை தேர்தலில் பாக முகவர்களின் கடமைகளையும், பூத் கமிட்டியினர் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும், வீடு வீடாக சென்று அவர்கள் உள்ளூரில் இருக்கிறார்களா அல்லது வெளியூர், வெளிநாடுகளில் இருக்கிறார்களா, 80 வயதுக்கு மேற்பட்டவர்களா, மாற்றுத் திறனாளிகளா என்பது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். வாக்காளர்கள் இறந்து விட்டால், அவர்கள் பெயரை நீக்க அதற்குரிய படிவங்களை நிரப்பி, உரிய அலுவலரிடம் கொடுக்க வேண்டும் என, ஆலோசனை வழங்கப்பட்டது.இக்கூட்டத்தில் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
30-Apr-2025