உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில், தேர்தல் தொடர்-பான பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.கிருஷ்ணராயபுரம் தனி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில் மண்டல அலுவலர்க-ளுடன் மாதிரி ஓட்டுப்பதிவு மையத்தின் ஓட்டுச்சாவடி அலுவ-லர்கள், முகவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கிருஷ்ண-ராயபுரம் தாசில்தார் மதியழகன், கிருஷ்ணராயபுரம் சமூக பாது-காப்பு தவி தாசில்தார் விதயாவதி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ