கரூர் மாவட்டத்தில் தொடர் மழை செட்டிபாளையம் தடுப்பணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
கரூர், கரூர் மாவட்டத்தில், தொடர் மழை காரணமாக செட்டிபாளையம் தடுப்பணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் வினாடிக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 1,238 கனஅடி மட்டுமே நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து ஆற்றுக்கு, 25 கனஅடி மட்டுமே நீர் திறக்கப்பட்டு வருகிறது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 75.46 அடியாக இருந்தது. கடந்த, மூன்று நாட்களுக்கு முன் கரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்ததால், கரூர் அருகே செட்டிபாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தடுப்பணை முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது.* மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்-படி வினாடிக்கு, 54,586 கன அடி தண்ணீர் வந்தது. அதில் காவிரியாற்றில், 54,086 கன அடியும், நான்கு பாசன வாய்க்காலில், 500 கன அடிநீர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 110 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 9.18 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் வாய்க்-காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.