உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஒப்பந்ததாரர்கள் சங்கம் தொடக்கம்

ஒப்பந்ததாரர்கள் சங்கம் தொடக்கம்

கரூர்:க.பரமத்தி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் சங்க தொடக்க விழா, தலைவர் அருண்குமார் தலைமையில் நடந்தது.அதில், செயலாளராக முத்துசாமி, துணை செயலாளராக சேகர், பொருளாளராக பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணா துரை, சுரேஷ், செயற்குழு உறுப்பினர்களாக கணேசன், பரணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும், ஒப்பந்ததாரர்கள் சங்கத்துக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, ஒப்பந்த பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பது, ஆன்லைன் டெண்டரில் பங்கேற்பது உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை