மேலும் செய்திகள்
அங்காள பரமேஸ்வரி அம்மன் தரிசனம்
26-Jun-2025
கிருஷ்ணராயபுரம்: வல்லம் மாரியம்மன் கோவிலில், குளிர்ச்சி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பூஜை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த வல்லம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. மாரியம்மனுக்கு குளிர்ச்சி விழாவை முன்னிட்டு, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கிடா வெட்டுதல், கோழி அறுத்தல் மற்றும் பொங்கல் வைத்தல் ஆகியவை செய்யப்பட்டன. விழாவில் பலர் கலந்து கொண்டனர்.
26-Jun-2025