மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா கொய்யா விற்பனை ஜோர்
08-Sep-2024
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் யூனியனுக்குட்பட்ட குழந்தைப்பட்டி, சிவாயம், பாப்பகாப்பட்டி, சரவணபுரம், ஆகிய பகுதிகளில், விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது, கொத்தமல்லி செடிகள் பசுமையாக வளர்ந்துள்ளன. விளைந்த தழைகளை பறிக்கும் விவசாயிகள், அதனை சிறிய கட்டுகளாக கட்டி விற்பனை செய்கின்றனர். சிறிய கட்டு ஒன்று, 10 ரூபாய்க்கு விற்கின்றனர். மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் ஓரளவு லாபம் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
08-Sep-2024