உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு கலைக்கல்லுாரியில் கலந்தாய்வு தொடக்கம்

அரசு கலைக்கல்லுாரியில் கலந்தாய்வு தொடக்கம்

கரூர் அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2025-26) கலந்தாய்வு கூட்டம் நேற்று தொடங்கியது.அதில், சிறப்பு பிரிவுகளான என்.சி.சி., முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. பிறகு, மாணவ, மாணவியருக்கு முதலாமாண்டு சேர்க்கைக்கான ஆணையை கல்லுாரி முதல்வர் ராதா கிருஷ்ணன் வழங்கினார். இன்றும், சிறப்பு பிரிவு மாணவ, மாணவியருக்கு கலந்தாய்வு நடக்கிறது.மேலும் வரும், 4,5,6 ஆகிய தேதிகளில் பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம், பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.பி.ஏ., பி.ஏ., வரலாறு மற்றும் பொருளாதாரம், பி.எஸ்.சி., பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வு மூலம், அரசு கலைக்கல்லுாரிகளில், 18 பாடப்பிரிவுகளை சேர்ந்த, 1,485 இடங்கள் முதலாமாண்டில் நிரப்பட உள்ளன. முதலாமாண்டுக்கான வகுப்புகள் வரும், 30ல் தொடங்குகிறது.* இதேபோல், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நேற்று மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர் களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடப்பதாக கல்லுாரி முதல்வர் வசந்தி தெரிவித்துள்ளார். இதே போல ஜூன், 6 முதல், 15ம் தேதி வரை பொது பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை