மேலும் செய்திகள்
பல்லாங்குழி சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
23-Jun-2025
குளித்தலை :வரகூரில் மாடு மாலை தாண்டும் விழா நடந்தது. குளித்தலை அடுத்த, தொண்டமாங்கிணம் பஞ்.. வரகூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாடு மாலை தாண்டும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. பக்தர்கள் 10 நாள் விரதம் இருந்து, கோலகம்பளி மந்தை நாயக்கர் மந்தையில் உள்ள எருதுகுட்டை சாமிக்கு, தினமும் மூன்று கால சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.முதல் நாள் திருவிழாவில் தேவராட்டத்துடன் சின்னக்காரி, பெரியக்காரி எருதுக்குட்டை சாமிக்கு கரகம் பாலித்து சிறப்பு பூஜை செய்தனர். நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாலை தாண்டும் விழா நடந்தது. திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 14 மந்தையர்களின் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றன.கோலகம்பளி மந்தை நாயக்கர் மந்தையில் அமைக்கப்பட்ட, மரத்தாலான எல்லை கோட்டை நோக்கி, 400க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந்தன. இதில் வாலியம்பட்டி கோணதாதா மந்தை மாடு முதலாவதாகவம், இரண்டாவதாக பேரூர் தாதல்மாதா மந்தை மாடும், மூன்றாவதாக இனுங்கூர் விருகாஜி மந்தை மாடும் ஓடி வந்து வெள்ளை துண்டை தாண்டி வெற்றி பெற்றன.
23-Jun-2025