உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குடிநீர் குழாயில் விரிசல் சாலையில் செல்லும் நீர்

குடிநீர் குழாயில் விரிசல் சாலையில் செல்லும் நீர்

கிருஷ்ணராயபுரம், வேங்காம்பட்டி பஞ்சாயத்து பகுதியில் உள்ள குழாயில் விரிசல் ஏற்பட்டு, குடிநீர் வீணாகி சாலையில் செல்கிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்து, வேங்காம்பட்டி கிராமத்து மக்களுக்கு தினமும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் ஏற்றப்பட்டு, காலை நேரத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், வேங்காம்பட்டி பகுதியில் இருந்து அய்யர்மலை பிரிவு சாலை வழியாக செல்லும் குழாயில் விரிசல் ஏற்பட்டு, தினமும் வீணாக சாலையில் தண்ணீர் செல்கிறது. இதனால் மற்ற பகுதியில் இருக்கும் மக்களுக்கு, தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, விரிசல் அடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி