உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / துாய்மை பணிகளுக்கு பயன்படுத்தும் வாகனங்கள் பாதிப்பு

துாய்மை பணிகளுக்கு பயன்படுத்தும் வாகனங்கள் பாதிப்பு

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் யூனியன் பஞ்சாயத்துகளில், துாய்மை பணிகளுக்கு பயன்படுத்தும் வாகனங்கள், சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலுார், சிவாயம், கருப்பத்துார், சிந்தலவாடி, சேங்கல், மகாதானபுரம், பிள்ளபாளையம், பஞ்சப்பட்டி, கள்ளப்பள்ளி ஆகிய பஞ்சாயத்துகளில் துாய்மை பணிகளுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பேட்டரி வாகனங்கள் தரப்பட்டது. மேலும் தள்ளுவண்டிகள் என, இரு வகையாக பயன்படுத்தப்பட்டது. தற்போது பல பஞ்சாயத்துகளில், துாய்மை பணிகளுக்கு பயன்படுத்தும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.வாகனத்தின் கதவுகளில் உள்ள இரும்புகள் தேய்ந்தும், பேட்டரிகள் பழுடைந்தும் உள்ளது. மேலும் குப்பை தொட்டிகள், பராமரிப்பு இன்றி மோசமாக காணப்படுகிறது. இதனால், பஞ்சாயத்துகளில் துாய்மை பணிகள் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, துாய்மை வாகனங்கள் மற்றும் குப்பை தொட்டிகளை பராமரிப்பு செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ