உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேதமடைந்த நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி

சேதமடைந்த நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி

கரூர், கரூர் அருகே, மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளதால், பராமரிக்க மேலே ஏற முடியாமல், ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாநகராட்சி, சணப்பிரட்டி அக்ரஹாரம் செல்லும் சாலையில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் பயன்பாட்டுக்காக, சணப்பிரட்டி ரயில்வே பழைய கேட் அருகே, பல ஆண்டுகளுக்கு முன் குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. அதன் மூலம் வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.இந்நிலையில், மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு செல்வதற்காக கட்டப்பட்ட படிக்கட்டுகள் சேதம் அடைந்துள்ளது. மேலும், குடிநீர் மேல்நிலை தொட்டியும் சேதம் அடைந்துள்ளது. தொட்டியை சுற்றி முட்புதர்கள் அதிகம் முளைத்துள்ளது.இதனால், மேல்நிலை குடிநீர் தொட்டியில், பராமரிப்பு பணிக்காக மேலே ஏறி செல்ல முடியாமல், மாநகராட்சி ஊழியர்கள் சிரமப் படுகின்றனர். எனவே, சணப்பிரட்டி அக்ரஹாரம் சாலையில் உள்ள, மேல்நிலை குடிநீர் தொட்டியின் படிக்கட்டுகளை, சீரமைத்து முட்புதர்களை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ