உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேதம் அடைந்துள்ள இரும்பு தடுப்பு கம்பிகள்: பீதியில் வாகன ஓட்டிகள்

சேதம் அடைந்துள்ள இரும்பு தடுப்பு கம்பிகள்: பீதியில் வாகன ஓட்டிகள்

கரூர், நவ. 9-கரூர் - சேலம் பழைய சாலையின் குறுக்கே, வெங்கமேடு அருகே ஈரோடு மற்றும் சேலம் ரயில்வே வழித்தடத்தில், 24 ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. கடந்த, 2021 ல் இரண்டு ரயில்வே வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டன. இதனால், உயர்மட்ட பாலத்தின் இருபக்கங்களிலும், பொதுமக்கள் தவறி ரயில்வே மின்தடத்தின் மீது விழாமல் இருக்க, இரும்பு கம்பியிலான தடுப்புகள் அமைக்கப்பட்டன.கடந்த சில மாதங்களுக்கு முன் வாகனம் மோதியதில், இரும்பு கம்பிகள் சேதம் அடைந்தது. அதை மாற்றாமல், நெடுஞ்சாலை துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் விட்டு விட்டனர். தற்போது, பாலத்தில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக, இரும்பு கம்பி தடுப்புகள் உள்ளன. குறிப்பாக, இரவு நேரத்தில் உயர்மட்ட பாலத்தில் செல்கிறவர்கள், தடுப்பு கம்பிகள் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, வெங்கமேடு ரயில்வே உயர்மட்ட பாலத்தில், சேதம் அடைந்துள்ள இரும்பு தடுப்பு கம்பிகளை மாற்றி, புதிதாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி